NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

உலகம்

அமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை

photodune-2043745-college-student-s

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் நடந்ததுபோல் அமெரிக்காவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் தலைவர் ஜான் பிரென்னன் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இஸ்தான்புல்லில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மனசாட்சியற்ற செயல். ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது துருக்கியில் நடத்தியதுபோல் உலகின் வேறு எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம். அதுவும் ஐ.எஸ். படைகளை அழிப்பதில் தீவிரம் காட்டி வரும் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த அவர்கள் முயற்சிக்கவில்லை என்றால்தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படும். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொள்கை விளக்க பத்திரிகையான தபீக்-கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்த தனிநபர்களை மூளைச்சலவை செய்து வருவது குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா முழுமையாக ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என யாராவது நம்பிக் கொண்டிருந்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" எனக் கூறியுள்ளார்