NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

முதலிடம் இலக்கு அல்ல: இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி கருத்து

photodune-2043745-college-student-s

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந் தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கு விராட் கோலி தலைமையிலான வீரர்கள் இன்று புறப்பட்டு செல் கின்றனர்.முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி நார்த் சவுண்டில் தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி மைதா னத்தில் கடந்த சில நாட்களாக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதை அனைவருமே அறிவர். 15 மாதங்கள் அவர் சர்வதேச அள விலான போட்டிகளில் பங்கேற்கா விட்டாலும் பந்தை சரியாக கையாளும் திறன் அவரிடம் உள்ளது. ஆடுகளம் எப்படியிருந் தாலும் சரியான திசையிலும், நீளத்திலும் பந்து வீசக்கூடியவர் ஷமி. டெஸ்ட் போட்டிக்கு இதுதான் மிகவும் முக்கியமானது.பந்தை ஸ்விங் செய்ய வேண்டும் என்றால் எப்படி வீச வேண்டும், ரிவர்ஸ் ஸ்விங் பந்தின் எந்த பகுதியில் இருந்து வெளிப்படும் என்பது போன்ற நுணுக்கங்களை ஷமி தெரிந்து வைத்துள்ளார். மேலும் பேட்ஸ்மேனை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற உணர்வையும் அவர் கொண்டுள்ளார். அவரது மன உறுதி விவகாரத்தில் கொஞ்சம் அவருடன் தற்போது பணியாற்றி வருகிறோம். அவர் சீரான முறையில் வீச உத்வேகப் படுத்துவோம்.ஷமி காயமடைவதற்கு முன்ன தாக அருமையான சீசன் அவருக்கு அமைந்தது. காயம் காரணமாக உலகக் கோப்பை டி 20-ல் அவரால் ஆட முடியவில்லை. எனவே மீண்டும் அணிக்குள் வந்து தனது மதிப்பை நிரூபிக்க நிச்சயம் ஆவலாக இருப்பார்.கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடக் கூடியவர். அதனால் விக்கெட் கீப்பருக்கு எங்களது முதல் தேர்வு விருதிமான் சஹா தான். டெஸ்ட் போட்டிகளில் பகுதி நேர விக்கெட் கீப்பரை பயன்படுத் துவது என்பது மிகவும் கடின மானது. விருதிமான் சஹா காயம் அடைந்தால் மட்டுமே அவரது பணியை ராகுல் கவனிப்பார்.எங்களது இலக்கு நம்பர் ஒன் அணியாக வர வேண்டும் என்பது அல்ல. மேலும் எந்த ஒரு அணியும் முதல் இடத்துக்காக விளையாடுவதாக நான் நினைக்க வில்லை. எங்களது முக்கிய குறிக்கோள் சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். நம்பர் ஒன் இடத்தை பிடித்தாலும், நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தால், 2-வது இடத்துக்கு பின்தள்ளப்படுவோம். இதை நாம் கட்டுப்படுத்த முடியாது.தரவரிசை என்பது ஒரு பொருள் போன்றது. சிறப்பாக விளையாடு வதற்கு அளிக்கப்படும் ஊக்கம் தான், அதை நாம் கொண்டாடு கிறோம். திட்டங்களை சரியாக வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம். இந்த சீசன் பெரியதாக அமைந்தள்ளது. எங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள இது உதவும்.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் நாங்கள் அதிக அளவி லான பாடம் கற்றோம். ஆட்டதின் போது இடை வேளைக்கு சற்று முன்னோ, அல்லது அதற்கு பிறகோ உடனே விக்கெட்டை இழக்க கூடாது. ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் இதில் கவனம் செலுத்த வேண்டும். விரைவிலேயே விக்கெட் களை இழந்தால் போராட்ட மாகிவிடும்.இவ்வாறு விராட் கோலி கூறினார்.