NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

தூள் கிளப்புமா துப்பாக்கிச் சுடுதல் அணி?

photodune-2043745-college-student-s

ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் 45 பதக்கங்களுக்காக ஆடவர் பிரிவில் 9 போட்டிகளும், மகளிர் பிரிவில் 6 போட்டிகளும் நடைபெறவுள்ளன. பதக்கத்தைக் கைப்பற்றுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 390 வீரர், வீராங்கனைகள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலிருந்து ஆடவர் பிரிவில் 9 பேர், மகளிர் பிரிவில் 3 பேர் என மொத்தம் 12 பேர் பங்கேற்கிறார்கள். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளோடு ஒப்பிடும்போது, இந்த முறை துப்பாக்கிச் சுடுதலில் அதிகமானோரை களமிறக்கியுள்ளது இந்தியா. 2004-இல் ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் டபுள் டிராப் பிரிவில் வெள்ளி வென்றார். அதுதான் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். 2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர், துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் கிடைத்தது. ஆனால் இந்த முறை 4 பதக்கங்கள் வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் 12 பேர் பங்கேற்றாலும், ஜிது ராய், அபிநவ் பிந்த்ரா, ககன் நரங், ஹீனா சித்து ஆகியோர் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு: ஜிது ராய்: ரியோ ஒலிம்பிக்கில் 50 மீ. பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவுகளில் பங்கேற்கிறார் ஜிது ராய். பாகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் 199.5 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஜிது ராய். சர்வதேச தரவரிசையில் 50 மீ. பிஸ்டல் பிரிவில் 2-ஆவது இடத்திலும், 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் 3-ஆவது இடத்திலும் உள்ளார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் 50 மீ. பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவுகளில் கணிசமான பதக்கங்களைக் குவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தூள் பறத்தி வரும் ஜிது ராய், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிநவ் பிந்த்ரா: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்கிறார். ஒலிம்பிக்கில் 5-ஆவது முறையாக பங்கேற்கும் பிந்த்ரா, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்றபோது தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றதே இல்லை என்ற நீண்ட நாள் குறை தீர்ந்தது. ஆனால் 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. இதனால் தகுதிச்சுற்றோடு வெளியேறினார். காமன்வெல்த் போட்டியில் 4 தங்கம் வென்றவரான அபிநவ் பிந்த்ராவுக்கு, ரியோ ஒலிம்பிக்கே கடைசி ஒலிம்பிக் போட்டியாகும். இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிந்த்ரா, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார். ஜெர்மனியின் மூனிச் நகரில் தீவிரப் பயிற்சியை முடித்துவிட்டு ஒலிம்பிக்கில் களமிறங்கும் பிந்த்ரா, இந்த முறை தங்கம் வெல்லும்பட்சத்தில் 10. மீ. ஏர் ரைபிள் பிரிவில் இரு தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். 10 மீ. ஏர் ரைபிள் பிரிவு, 1984 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரையில் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் வெவ்வேறு வீரர்களே தங்கம் வென்றுள்ளனர். எனினும் பிந்த்ராவின் தற்போதைய ஃபார்மை கணக்கில் கொண்டால், அவர் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
ககன் நரங்:
ஆடவர் 50 மீ. ரைபிள் 3 "பொசிஷன்ஸ்', 50 மீ. ரைபிள் புரோன், 10 மீ. ஏர் ரைபிள் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்கிறார் ககன் நரங். கடந்த ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற நரங், இந்த முறையும் அதே பிரிவில் பிந்த்ரா உள்ளிட்டோருக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 பிரிவுகளில் பங்கேற்பதால், ஒரே நேரத்தில் அந்த மூன்றிலும் சிறப்பாக செயல்படுவது கடினம் என்றாலும், தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நரங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளார். அவருடைய "பினிஷிங் டச்' சரியில்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் ஏதாவது ஒரு பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீனா சித்து:
ரியோ ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல், 25 மீ. பிஸ்டல் ஆகிய பிரிவில் பங்கேற்கிறார் ஹீனா சித்து. தில்லியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
கடந்த ஒலிம்பிக்கில் தகுதிச்சுற்றோடு வெளியேறினாலும், இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் உலக சாதனைக்கு சொந்தக்காரரான ஹீனா, சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். ஹீனா, தங்கமோ அல்லது வெள்ளியோ வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளிகளும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும், 2010 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். அவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்பட்சத்தில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார்.

இந்திய அணி விவரம்
(பங்கேற்கும் போட்டி அடைப்பு குறிக்குள்)
ஆடவர் பிரிவு
1. அபிநவ் பிந்த்ரா (10 மீ. ஏர் ரைபிள்).
2. ககன் நரங் (50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ், 50 மீ. ரைபிள் புரோன், 10 மீ. ஏர் ரைபிள்).
3. ஜிது ராய் (50 மீ. பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல்).
4. செயின் சிங் (50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ், 50 மீ. ரைபிள் புரோன்).
5. குருபிரீத் சிங் (25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல்).
6. பிரகாஷ் நஞ்சப்பா (50 மீ. பிஸ்டல்).
7. மானவ்ஜித் சிங் சாந்து (டிராப்).
8. கினான் செனாய் (டிராப்).
9. மைராஜ் அஹமது கான் (ஸ்கீட்).
மகளிர்
1. ஹீனா சித்து (10 மீ. ஏர் பிஸ்டல், 25 மீ. பிஸ்டல்).
2. அபூர்வி சன்டீலா (10 மீ. ஏர் ரைபிள்).
3. அயோனிகா பால் (10 மீ. ஏர் ரைபிள்).

" class="fb_share">