NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News

யானைகள் கடக்கும் ரயில் பாதைகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்படுமா?

photodune-2043745-college-student-s

தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,113 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இவைதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரை 22 யானைகள் மின் வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளன. மேலும், ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழுவானது, நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது . இந்தப் பதிப்பின் ஒரு பகுதியானது, டிசம்பர் 2014 -ஆம் ஆண்டு துணை நிலைக் குழு வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியாகச் செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையில் இடம் பெற்றது. இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைத் தவிர்த்தலேயாகும். அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், அபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க சாலைகளை சுற்று வழியில் அமைக்க வேண்டும் என்பதேயாகும்.