NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


நாணயத்தின் இரு பக்கமாக இருப்போம்; ஜெ., எதிரி கட்சியாக இருக்காது; ஸ்டாலின்

photodune-2043745-college-student-s

சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று துவங்கியது. கூட்டத்தில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முதல்வர் ஜெ., ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக., எதிர் கட்சியாக செயல்படுமே தவிர எதிரி கட்சியாக இருக்காது என்றார். இன்றைய கூட்டத்தில் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் முதல்வர் ஜெ., வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 2ம் முறை தேர்வான தனபால் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. தராசு முள் போல் சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் தேய்ந்தால் கூட நாணயம் செல்லாததாகி விடும். என அண்ணாதுரை கூறியுள்ளார். இவர் சொன்னது போல் அவரது பெயரில் தாங்கியுள்ள கட்சியாக நாங்கள் செயல்படுவோம். அவையின் மாண்பை மதிக்க வேண்டும். சபாநாயகரின் மரபை காக்கும் வகையில் , எதிர்கட்சியாக செயல்படும் என நம்புகிறேன் என்றார் முதல்வர் ஜெ., இரண்டாவது முறை தொடர்ந்து என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி. எதிர்கட்சி எண்ணிக்கைக்கு போல் அல்லாமல் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம். மக்கள் நலன் காக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு ஜெ., பேசினார்.