NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலகலமாகத் தொடங்கியது:

photodune-2043745-college-student-s

பூரி: ஒடிசா மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று கோலகலமாகத் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். பூரி ஜெகந்நாதர் ரதத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமுமம் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்கு சென்று ஓய்வு எடுப்பாரக்ள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்கு திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவத்துக்கு படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த ரதயாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்த தேர் கலைக்கப்படும். இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம்வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும்போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திரும்புவார்கள். இந்த புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா இன்று காலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். மூன்று தேரும் அழகாக அசைந்து தெருக்களில் வலம் வந்தது. இன்று ஒருநாள் மட்டும்தான் இந்துக்கள் அல்லாதவர்கள் ஜெகந்நாதர், பாலபத்திரர்,தேவி சுபத்ராவை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜெகந்நாதர் தேர் திருவிழாவின் பாதுகாப்புக்காக 142 பட்டாளியன் போலீஸார், 2 கம்பெனி அதிரடிப்படையினர், 3 யூனிட் ஒடிசா ஆயுதப்படை போலீஸார், தேசியப் பேரிடர் மீட்பு அமைப்பினர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இதேபோன்ற ஜெகந்நாதர் கோயில் இருக்கிறது அந்த கோயிலுக்கு இன்று காலை சென்ற பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வழிபாடு நடத்தினார்.