NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பிஹாரில் நக்சல் தாக்குதலில் சிஆர்பிஎப் கமாண்டர்கள் 10 பேர் வீர மரணம்

photodune-2043745-college-student-s

பிஹார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கோப்ரா பிரிவு கமாண்டர்களைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி வகை வெடிகுண்டு தாக்குதலில் 10 கமாண்டர்கள் வீர மரணமடைந்தனர். வெடிகுண்டு தாக்குதலையும் மீறி கமாண்டர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 8 மணி நேரம் சண்டை நீடித்தது. இத்தாக்குதல் குறித்து காவல்துறை கூடுதல் டிஜிபி சுனில் குமார் கூறும்போது, "அவுரங்காபாத் - கயா பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் கோப்ரா பிரிவு கமாண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமாண்டர்களைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி வகை வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த வீரர்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார். வீர மரணமடைந்த, காயமடைந்த கமாண்டர்கள் அனைவரும் கோப்ரா படைப் பிரிவின் 205-வது பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.