NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


திருத்தி கொள்ளாத முதல்வர் : கருணாநிதி காட்டம்

photodune-2043745-college-student-s

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அவ்வப்போது, உரிய பதில்களை சொல்லத் திராணியும், தைரியமும் இல்லாதவர்கள் தான், அவதுாறு வழக்குகள் என்ற பெயரால், அரசு செலவில் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்திப் பழிவாங்கும் வகையில், கொல்லைப்புற வழியில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, நல்ல பாடம் புகட்டும் வகையில் தான், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,'அவதுாறு வழக்கில், வழக்கை பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட பேச்சில், கருத்தில் அவதுாறு இருக்கிறதா என்று ஆராய வேண்டும். தமிழக அரசு, அரசு தரப்பு வழக்கறிஞர்களை போஸ்ட் மேனாக பயன்படுத்துகிறது' என கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால், நீதிபதிகளின் ஆக்கப்பூர்வமானதும்கூர்மையானதுமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தன் எண்ணத்தையும்; வழியையும் திருத்திக் கொள்ளக் கூடியவர் அல்ல நம் முதல்வர்.இதுவரை எத்தனை நீதிபதிகள், சீர்திருத்தி செழுமைப்படுத்திடும் நோக்கில், தங்கள் ஆழ்ந்த கருத்துகளை, தமிழக முதல்வரை நோக்கி கூறியுள்ளனர். அதற்கெல்லாம் செவிமடுத்து வருத்தப்படாதவரா, இதற்காக சிந்தித்து, தனது வழக்கமான பாதையை செப்பனிட்டு கொள்ளப் போகிறார்?இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.