NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பூக்கள் எடுக்கும் வினோத அவதாரங்கள்

photodune-2043745-college-student-s

மனிதர்கள், எதன் மீதும் தங்கள் நம்பிக்கைகள், பயங்களை போர்த்தித்தான் பார்ப்பர். இதனால், இல்லாததை இருப்பதாக பாவித்துக் கொள்வது வழக்கம். நிலாவில் கால் நீட்டிய கிழவி, செவ்வாயில் கடவுளர் உருவம் என்று பார்ப்பது இதன் அடிப்படையில் தான். காடெங்கும் மலர்ந்திருக்கும் பூக்களிலும், மனிதனின் கண்களுக்கு பல வடிவங்கள் தெரிகின்றன. ஆனால், தாவரங்கள் தங்கள் இனப்பெருக்கம் அல்லது எதிரிகளிடமிருந்து தற்காப்பு ஆகிய இரண்டுக்கும் தான் பலவித உருவங்களை தரித்துக் கொள்வதாக தாவரவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இப்படி வினோத உருவங்களை கொண்ட சில பூக்கள் இதோ. குரங்கு மூஞ்சிப் பூ வட கிழக்கு ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் மலைக் காடுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பூவை சற்று தள்ளி நின்று பார்த்தால், அசல் குரங்கு தான். அதன் இதழ்களின் நுனி, ரத்தக்காட்டேரியின் விரல்கள் போல கூர்மையாக இருப்பதால், இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்து ஆங்கிலத்தில், 'மங்கி பேஸ் ஆர்க்கிட்' என அழைக்கின்றனர். இந்தப் பூவின் தாவரவியல் பெயர், டிராகுலா சிமியா. ஆண்டு முழுவதும் பூக்கும் இந்தப் பூ, கனிந்த ஆரஞ்சு பழத்தின் வாசம் கொண்டது.