NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு: பிரதமர் வேண்டுகோள்

photodune-2043745-college-student-s

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பார்லிமென்ட் நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும். இந்த கூட்டத்தொடரில், ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டை வளர்ச்சி பாதையில் வேகமாக கொண்டு செல்வதற்கான முடிவை நம்மால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சிக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் விவாதம் நடத்துகிறார்.