NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம்

photodune-2043745-college-student-s

சென்னை : சென்னை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சட்டசபை தேர்தலின் போது அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு பெறுவதற்காக, முதல்வர் தனி பிரிவு சிறப்பு அதிகாரி கணேஷ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த மனுக்கள் உடனடியாக முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை, ஓய்வூதிய தொகை கேட்டும், பட்டா கேட்டும் வரப்பெற்றவை ஆகும். எனவே அது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி