NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


ஜப்பானின் முதல் ஓட்டுனரில்லா வாகனம்!

photodune-2043745-college-student-s

கூகுளின் ஓட்டுனரில்லா வாகனம், இன்னும் வெள்ளோட்டத்தை தாண்டவில்லை. டெஸ்லாவின் ஓட்டுனரில்லா கார் ஏற்படுத்திய ஒரு மரண விபத்தால் போன வாரம் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.இருந்தாலும், உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்கள் ஓட்டுனரில்லா தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மும்முரமாகவே இருக்கின்றன. இதுவரை ஜப்பானிய கார் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தாமல் இருந்தன. சில நாட்களுக்கு முன் நிஸ்ஸான் கார் நிறுவனம், தன் 'செரினா' மினி வேன் விரைவில், 'ப்ரோ பைலட்' என்ற ஓட்டுனரில்லா தொழில்நுட்பத்தை தாங்கி வெளிவரும் என அறிவித்திருக்கிறது. நிஸ்ஸானின் தொழில்நுட்பமும் டெஸ்லாவின் தொழில்நுட்பத்தை போன்றே இருக்கிறது. அதாவது, காரின் ஓட்டுனர், காரை முடுக்கி, சிறிது துாரம் ஓட்டி, நெடுஞ்சாலைக்கு சென்ற பின், அவர் ஒரு பொத்தானை அமுக்கினால் போதும். ஓட்டுனரில்லா தொழில்நுட்பம் காரை செலுத்த ஆரம்பித்துவிடும். அதுவும் சிங்கிள் லேன் சாலைகளில் தான் இந்த தொழில்நுட்பம் இயங்கும். பல லேன்கள் உள்ள சாலைகளில் ஓட்டுனரே தான் காரை செலுத்த வேண்டும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் நிஸ்ஸான் தன் மின்சார காரான, 'லீப்' மூலம் இந்த தொழில்நுட்பத்தை வெள்ளோட்டம் பார்த்தது. இருந்தாலும் தற்போது பெரிய வாகனமான, 'செரினா' மூலமே இந்த தொழில்நுட்பத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. ஆகஸ்ட் இறுதியில் ஜப்பானில் மட்டும் இதை நிஸ்ஸான் அறிமுகப்படுத்தும். 2017ல் பிற நாடுகளுக்கு செரினா அறிமுகமாகலாம் என்று தெரிகிறது.