NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


கல்லால் அடித்து வாலிபர் கொலை

photodune-2043745-college-student-s

திருச்சி: திருமணம் செய்த வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், கல்லகமை சேர்ந்தவர் இளையராஜா, 25. கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்ததால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, காதல் ஜோடி, ஊரை விட்டு வெளியூர் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. பின், இவர்களை தேடிப்பிடித்து நேற்று முன்தினம் ஊருக்கு அழைத்து வந்து, சமாதானம் பேசி, பெண் வீட்டார் பெண்ணை தங்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். இந்நிலையில், நேற்று காலை, கல்லக்குடி அருகே தனியார் ஐ.டி.ஐ., பின்புறம் இளையராஜா கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். லால்குடி போலீசார் விரைந்து வந்து, அவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இளையராஜா கொலை குறித்து போலீசார் கூறுகையில், 'காதலித்த பெண்ணின் அண்ணன் அருண் உள்ளிட்ட சிலர், இளையராஜாவைத் தாக்கி, அவரது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பியோடி விட்டனர். குற்றவாளிகளை யார் என்று தெரிந்தாலும் மேலும் யார், யார் இதில் தொடர்புள்ளவர்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்