NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


உலக மசாலா: உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்!

photodune-2043745-college-student-s

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் இந்தோனேஷி யாவில் வசிக்கும் ஆர்ய பெர்மானா. 10 வயதாகும் இவனது எடை 192 கிலோ. அரிசி, இறைச்சி உணவுகளை தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். உடல் பருமானால் நடக்க முடியவில்லை. அதனால் பள்ளிக்கும் செல்லவில்லை. ஆடைகளையும் அணிய முடியவில்லை. “2 பெரியவர்களின் ஒரு நாள் உணவை என் மகன் சாப்பிடுகிறான். பெரிய தண்ணீர் தொட்டியில் 4 மணி நேரம் குளிப்பான். உதவியின்றி இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அடிக்கடி மூச்சு விட சிரமப்படுவான். பிறக்கும்போது 3.2 கிலோ இருந்தான். அவனுடைய பசியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எடையையும் குறைக்க முடியவில்லை. விவசாயத் தொழில் செய்துவரும் எங்களால் பெரிய மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்க்க இயலவில்லை”’ என்கிறார் பெர்மானாவின் அம்மா. ஐயோ… பாவம் குழந்தை… சீனாவின் ஸெங்ஸோவ் பகுதியில் வசிக்கிறார் ஸோவ். சமீபத்தில் ரூ.3 லட்சத்துக்கு மினி வேன் ஒன்றை வாங்கினார். 88888 என்ற அதிர்ஷ்ட எண் கொண்ட நம்பர் பிளேட் வாங்குவதற்கு மட்டும் கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்! மகிழ்ச்சியில் முதல் நாள் மினி வேனை எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் போக்குவரத்துக் காவலர்கள் வண்டியை நிறுத்தினார்கள். இந்த எண்களுக்கும் வேனுக்கும் சம்பந்தம் இல்லை, அதனால் போலியாக இருக்குமோ என்று நினைத்தனர். அரை மணி நேரம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். சிறிது தூரம் சென்றதும் அடுத்த பகுதி காவலர்கள் வண்டியை நிறுத்தினர். அவர்களுக்கும் அரை மணி நேரம் விளக்கம் கொடுத்தார். இப்படி ஒரு நாளில் மட்டும் 8 முறை அவரது வண்டி நிறுத்தப் பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. “நான் பழங்களை ஏற்றிச் செல்வதற்காகத்தான் மினி வேன் வாங்கினேன். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இருப்பதாலும் வித்தியாசமாகவும் விளம்பரமாகவும் இருக்கட்டுமே என்று இந்த எண்களை கஷ்டப்பட்டு வாங்கினேன். ஒரே நாளில் நொந்து போய்விட்டேன்” என்கிறார் ஸோவ்.