NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆப்கனில் 37 போலீஸார் பலி

photodune-2043745-college-student-s

காபுல் நகரில் காவல்துறை வாகனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 37 போலீஸார் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து காவலர்களை ஏற்றி வந்த வாகனம் நேற்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், குறைந்தபட்சம், 37 போலீஸார் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 40 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கார் குண்டு அல் லது தற்கொலைப் படைத் தாக்கு தலின் மூலம் போலீஸ் வாகனம் தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாகனம் வெடித்துச் சிதறிய உடன், தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக, தலிபான் தீவிர வாதிகள் அறிவித்தனர். தங்களின் தற்கொலைப் படைத் தாக்குதல் பிரிவினர் இதை வெற்றிகரமாக செய்து முடித்தனர் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அறிவித்துள்ளார்.