NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


சர்வதேச திறமையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதிய திட்டங்களை தேர்தல்கிளிண்டன்

photodune-2043745-college-student-s

சர்வதேச திறமையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதிய திட்டங்களை தேர்தல் வாக்குறு திகளாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளிண்டன், தொழில்நுட்பத் துறை யில் தான் அமல்படுத்தப் போகும் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து, டென்வர் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். ஓட்டுநர் இல்லாத கார், பொருட் களுக்கான இனையம் ‘ஸ்மார்ட் ஃபேக்டரி’ போன்றவற்றுக்கு தேவையான 5ஜி தொழில்நுட்பம் மற்றும் புதிய தலைமுறை ஒயர்லெஸ் தொழில்நுட்பங்களை மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வருவது, அதிவிரைவு இணைய சேவைகளை 2020-க்குள் அனைத்து அமெரிக்க வீடுகளுக்கும் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட திட்டங்களை ஹிலாரி முன்வைத்துள்ளார். ‘ஸ்டெம் மாஸ்டர்ஸ்’ எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்குத் துறையில் முனைவர் பட்டம் முடித்த வெளிநாட்டு மாணவர் களுக்கு, நிபந்தனை அடிப்படை யிலான ‘கிரீன்கார்டு’ அந்தஸ்து வழங்கும் திட்டத்தை ஹிலாரி முன்வைத்துள்ளார். பல்வேறு பல்கலைக் கழகங் களில் கல்வி பயில, ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் செல்கின் றனர். குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே, ஹிலாரியின் வாக்குறுதியால் இந்திய மாணவர்கள் பயன் பெறுவர். சர்வதேச அளவில் தேர்ந்த தொழில் முனைவோர், அமெரிக் காவில் குறிப்பிட்ட அளவுக்கு வேலைவாய்ப்யை ஏற்படுத்தி, உற் பத்தித் திறனையும் நிரூபித்தால், அவர்களுக்கு பிரத்தியேகமான ஸ்டார்ட் அப் விசா வழங்குவது குறித்தும் ஹிலாரி அறிவித்துள்ளார். வெளிநாட்டு தொழில்முனைவோர் தங்கள் திறனை நிரூபித்து, ‘கிரீன் கார்டு’ பெறவும் இதில் வாய்ப்பு அளிக்கப்படும்.