NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பயிர்க்கடன் ரத்து: அரசாணை வெளியீடு

photodune-2043745-college-student-s

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. கூட்டுறவுத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில், கூட்டுறவு சங்கங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான அசல் வட்டி, அபராத தொகை அனைத்துமே தள்ளுபடி ஆக உள்ளது. கடந்த மார்ச் 16ம் தேதிக்கு முன்புவரை பெற்ற கடன்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி உத்தரவு பொருந்தும். தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். தொடர்ந்து முதல்வராக பதவியேற்றதும், பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இதை செயல்படுத்தும் வகையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.