NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


சுவாதி கொலையாளி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா?- போலீஸ் தீவிர விசாரணை

photodune-2043745-college-student-s

சுவாதியை கொலை செய்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய் யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசா ரணை நடந்து வருகிறது. சுவாதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தெரி யாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகளின் செல்போன் பேச்சை வைத்தே அவர்களை போலீஸார் கைது செய்து வரு கின்றனர். ஆனால் சுவாதி வழக்கில் அவரது செல்போன் எண் மூலம் எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. அவரது செல் போனையும் கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் செல்போனில் இருக்கும் வாட்ஸ்-அப், வைபர், ஐஎம்ஓ போன்ற தகவல் தொடர்பு அப்ளிகேஷன் களில் என்னென்ன பேசப்பட் டுள்ளன. செல்போனில் புகைப் படங்கள் எதுவும் இருக்கிறதா? போன்ற எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தவரா?
கொலையாளி பயன்படுத்திய அரிவாள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகிய இரண்டை மட்டுமே வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பயன் படுத்திய அரிவாள் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் குறிப் பிட்ட சமூகத்து மக்கள் பயன் படுத்துவது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரூ, பெங்களூரூவில் சுவாதி பணியாற்றியுள்ளார். எனவே அப்போது அவரையா ராவது ஒருதலையாக காதலித்து, அதை சுவாதி நிராகரித்து இருக் கலாம் என்று கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர் சுவாதி யை பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.