NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பதன்கோட் தாக்குதலில் பாக்.,கிற்கு தொடர்பில்லை: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

photodune-2043745-college-student-s

புதுடில்லி : பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், பாக்., அரசுக்கும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ., தலைவர் சரத் குமார் தெரிவித்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக டிவி ஒன்றிற்கு தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்.ஐ.ஏ.,) தலைவர் சரத்குமார் எழுத்துபூர்வமாக அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கோ அல்லது மசூத் அசாருக்கோ பாக்., அரசும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,சும் உதவிகள் செய்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார். அவரது இப்பதில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனிடையே சரத்குமாரின் பேட்டி டிவியில் திரித்து ஒளிபரப்பப்பட்டதாக என்.ஐ.ஏ., விளக்கமளித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுகுறித்து சரத்குமார் விளக்கமளித்ததாகவும், இதில் பாக்., அரசுக்கு தொடர்புள்ளது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்., கட்சியின் செய்திதொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, காங்., மூத்த தலைவர் அகமது பட்டேல், ஆம்ஆத்மி தலைவரும் டில்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.