NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


ராணுவ கிடங்கில் தீ : பிரதமர் கவலை ; தளபதி விரைகிறார்

photodune-2043745-college-student-s

மும்பை: நாக்பூர் அருகே ராணுவ வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரிகள் 2 பேர் உள்பட 20 ராணுவ வீரர்கள் பலியாயினர். மகாராஷ்ட்டிரா மாநிலம் புல்கான் பகுதியில் ராணுவ வெடி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு அதிகாலையில் பெரும் சப்தத்துடன் வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 20 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 19 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் ஏதும் அறியப்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ராணுவ மட்டத்தில் நடந்த இந்த 2 வது விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் விரைகிறார்: சம்பவம் நடந்த இடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விரைந்துள்ளார். இங்கு நடந்த விதம் குறித்து விசாரிப்பதுடன், காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.