NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


நிலவில் கால் பதிக்கும் முயற்சிகள் 2018-ல் மேற்கொள்ளப்படும் : சீனா

photodune-2043745-college-student-s

பெய்ஜிங்: சந்திரன் குறித்த ஆய்வை விரிவுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா, சீனா ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளன. சந்திரன் குறித்து சீனா தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக 4 விண்கலங்களை அந்நாடு ஏற்கனவே அனுப்பியுள்ளது. நிலவில் கால் பதிக்கும் முயற்சிகள் 2018-ல் மேற்கொள்ளப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. சந்திரனின் வடக்கு, தெற்கு துருவங்களில் ஆய்வு நடத்துவதே அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தகட்ட முயற்சியாகும்.