NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


‘பயிற்சியாளராக இந்தி தெரிய வேண்டும்’ : பிசிசிஐ சர்ச்சை

photodune-2043745-college-student-s

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக, 9 தகுதிகளை பட்டியலிட்டு, விளம்பரம் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், ‘பயிற்சியாளராக விண்ணப்பிப்பவருக்கு ஆங்கிலப் புலமை நன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி தெரிந்திருந்தால் விரும்பத்தக்கது. ஆனாலும் கட்டாயமில்லை’ என கூறப்பட்டிருக்கிறது. இது இந்தி திணிப்பை ஏற்படுத்துவதாக இருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு தற்போது இயக்குனராக உள்ள ரவிசாஸ்திரி் விண்ணப்பிக்க இருப்பதாகவும், அவரே பயிற்சியாளராவார் என்றும் கூறப்படுகிறது.