NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


லட்சக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவம், பொறியியல் சீட்டுகள்

photodune-2043745-college-student-s

சென்னை: மருத்துவம், பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு, கட்டண இடங்கள் என்ற முறையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு சீட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால் கல்வியின் தரம் குறைந்து மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் பரபரப்பாகும் பெற்றோர்களின் முதல்கட்ட கவலையாக இருப்பது பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்க பணம் தயார் செய்வதுதான். மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் அதை பெருமைப்பட்டுக்கொள்ள மட்டும் தான் உதவும். அந்த அளவுக்கு கல்வி, வணிக பட்டியலில் இடம்பிடித்து வெகுகாலம் ஆகிவிட்டது. இதை உணராத பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு பணத்தை வாரியிரைக்கின்றனர். பணத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு பயிலும் மாணவர்களின் கல்வி தரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதே அவர்கள் உணர்வதில்லை. பணத்தால் விளையும் கல்வி, அதை சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொள்ளும் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் இதை மறுக்கும் கல்வியாளர்கள் மருத்துவ கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே நிர்வாக ஒதுக்கீடு இருப்பதாக கூறுகின்றனர். பொறியியல் கல்லூரிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் திறமையான மாணவர்களுக்கும் தாராளமாக இடம் கிடைக்கும் என்கின்றனர் அவர்கள்.