NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


நடிக்க வந்த தந்திர கலை ஓவியர்

photodune-2043745-college-student-s

கலைதுறையில் பல தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர். அந்த வரிசையில் ஓவிய கலையும் ஒன்று. நட்சத்திரங்களை மட்டுமல்லாமல் பட காட்சிகளையும் தத்ரூபமாக வரைந்து இயக்குனர்களுக்கு தருவார்கள். கமல்ஹாசனை பல மாடல்களில் ஓவியமாக வரைந்து அவருக்கே அதை பரிசாக அளித்தவர் ஏ.பி.ஸ்ரீதர். ‘மையம்’ படத்தையும் தயாரித்திருக்கிறார். தற்போது ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள தந்திர ஓவிய கலையை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். சென்னை தீவு திடலில் புத்தக கண்காட்சியில் இதனை அமைத்திருக்கிறார். இதுபற்றி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறும்போது, ‘தந்திரகலை அருங்காட்சியகம் இன்று சர்வதேச அளவில் பிரபலம். அதை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தி உள்ளார். ஓவியங்களுடன் இணைத்துக்கொண்டு நம்மை புகைப்படம் எடுத்துக்கொள்ளும் டெக்னிக் வித்தியாசமானது’ என்றார்.