NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


இந்தியா-வெ.இ. தொடர்: அட்டவணை அறிவிப்பு

photodune-2043745-college-student-s

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு, கோஹ்லி தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பயிற்சிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ஜூலை 6ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் சென்றடைகிறது. கோஹ்லி தலைமையில் கடந்த 2 டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வென்றுள்ளது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவையும், இலங்கையையும் நமது அணி வென்றுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக கேப்டன் ேடானி தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.