A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: id

Filename: controllers/Cinema.php

Line Number: 69

Backtrace:

File: /home/newsreportr/public_html/application/controllers/Cinema.php
Line: 69
Function: _error_handler

File: /home/newsreportr/public_html/index.php
Line: 315
Function: require_once

 சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்

    வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி - விமர்சனம்

  • photodune-2043745-college-student-s

    நடிப்பு: ரத்தன் மவுலி, ஸ்ராவியா, சூசா குமார், லிவிங்ஸ்டன், ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். இயக்கம்: புகழ்மணி தயாரிப்பு: கோவிந்த் ஸ்டுடியோ இசை: தாஜ்நூர் ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ்

    அந்த வீட்டுக்கு செல்லப்பெண், ஸ்ராவியா. தன் மகளுடைய கல்யாணத்தை நடத்துவதற்கு திருமண மண்டபத்தைக் கட்டுகிறார், அப்பா சித்ரா லட்சுமணன். ெவள்ளிக்கிழமை 13ம் தேதி ஸ்ராவியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஸ்ராவியாவை ஒருதலையாய்க் காதலிக்கும் முறைமாமன், தனக்குக் கிடைக்காதவள் இன்னொருவருக்கு கிடைக்கக் கூடாது என்று, மணப்பெண் அறையில் தூங்கிக் கொண்டி ருக்கும் ஸ்ராவியா மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைக்கிறான். இதில் ஸ்ராவியா உட்பட 13 பேர் இறந்து விடுகிறார்கள். அவர்கள் ஆவியாகி, அந்த திருமண மண்டபத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விபரங்கள் தெரியாத ரத்தன் மவுலி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ் ஆகியோர், மண்டபத்துக்கு பெயின்ட் அடிக்க வருகிறார்கள். பேய்கள் அவர்களைப் புரட்டி எடுக்கிறது. ஸ்ராவியாவின் அண்ணன் ராம்ஜி, அந்தப் பேய்களை விரட்டினால் மண்டப நிர்வாகத்தையும், லாபத்தில் பங்கும் தருவதாக ெசால்கிறார். இந்த சவாலை ரத்தன் மவுலி குழுவினர் ஏற்கிறார்கள். அவர்கள் எப்படி பேயை விரட்டுகிறார்கள் என்பது மீதி கதை. விதவிதமான பேய் படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், திருமண மண்டப பேயைக் காட்டி, காமெடி பண்ணியிருக்கிறார்கள். திமிர் பிடித்த பெண்ணாகவும், பேயாகவும் நடித்து மிரட்டுகிறார் ஸ்ராவியா. எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் ரத்தன் மவுலி அன்ட் கோஷ்டியினர், சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். சூசா குமார், ரத்தன் மவுலியை துரத்தித் துரத்தி காதலிப்பதோடு சரி. எம்.எஸ்.பாஸ்கர் குழுவின் ‘டாய்லெட் காமெடி’, நெளிய வைக்கிறது.கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவு, திகில் ஏற்படுத்த தவறியிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள், விட்டலாச்சாரியா காலத்து ெடக்னிக். இசையால், பேய் பயம் காட்டுகிறார் தாஜ்நூர். லிவிங்ஸ்டன், ரேகா, நிரோஷா வரும் காட்சிகள், டி.வி சீரியல் டைப். சிரிக்கவும், பயமுறுத்தவும் நினைத்து ஏதேதோ செய்திருக்கிறார்கள். அந்த இரண்டுமே வர மறுக்கிறது.

    2 years ago