சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்


    முதல் பார்வை: ஜாக்சன் துரை - பேய் முயற்சியில் 'சோதனை'!

  • photodune-2043745-college-student-s

    'பர்மா' இயக்குநர் தரணிதரனின் அடுத்த படம், சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் 10-வது படம், சிபிராஜ்- சத்யராஜ் கூட்டணியில் வெளியாகும் 5-வது படம், த்ரில்லர் காமெடி சார்ந்த பேய் படம் என்ற இந்த காரணங்களே ஜாக்சன் துரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. சிபிராஜூம் - சத்யராஜூம் இணைந்து நடித்த படங்கள் என்ற சிறப்புக் கவனம் பெற்ற போதிலும், அவை சிபிராஜூக்கு நடிகன் என்ற அடையாளத்தை அள்ளி வழங்கவில்லை. இந்தப் படம் கடந்து வந்த வரலாற்றை தொடரச் செய்யாமல், சிபிக்கு புது எனர்ஜி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தோம். பேய், ஆவியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் தற்போது ஹாரர் பாதி, காமெடி மீதி என்றே சரிவிகிதப் பாணியில் எடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் 'ஜாக்சன் துரை'யும் உள்ளேன் ஐயா சொல்கிறது. கதை: அயன்புரம் கிராமத்தில் ஜாக்சன் பேய் இருப்பதாக ஊரே அஞ்சுகிறது. இதனால் உண்மை நிலையைக் கண்டறிய எஸ்.ஐ. சிபிராஜ் அந்த ஊருக்கு வருகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த ஊர் மக்களின் அச்சத்துக்குக் காரணம் என்ன? அதை எப்படி சிபி கண்டுபிடிக்கிறார்? அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? தன் ந

    3 years ago