சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்


    சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

  • photodune-2043745-college-student-s

    சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இந்தியளவில் பெரும் பட்ஜெட் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'முத்தின கத்திரிக்கா' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்திருந்தார். சுந்தர்.சி. இப்படத்தில் நடித்துக் கொண்டே தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார். இப்படத்தின் பணிகள் சுமார் 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.'நான் ஈ', 'மஹாதீரா’ தற்போது 'பாகுபலி 2' படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய கமலக்கண்ணன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்ற இருக்கிறார். மேலும், இப்படத்தின் கலை இயக்குநராக சாபு சிரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இதர தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முதன்முறையாக சுந்தர்.சி இயக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையம

    3 years ago