சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்


    மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நிவின் பாலி ஒப்பந்தம்

  • photodune-2043745-college-student-s

    அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நிவின் பாலி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' மற்றும் 'ப்ரேமம்' ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நிவின் பாலி. தமிழில் நேரடி படமாக அவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. இப்படம் முழுவதும் தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் நிவின் பாலி. இப்படத்தின் கதையை 'ரெமோ' தயாரிப்பாளர் ராஜா எழுத புதுமுக இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்க இருக்கிறார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இயக்குநர் அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் நேற்று (ஆகஸ்ட் 2) கையெழுத்தானது. இப்படத்தை புதுமுக இயக்குநர் சூர்யா பாலகுமாரன் இயக்கவிருக்கிறார். மலையாளத்தில் முன்னண

    3 years ago