சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்


    ‘இங்கு நிறைய அரசியல் இருக்கிறது; அதை தட்டிக் கேட்க முடியாது’- விஜய் சேதுபதி சிறப்பு பேட்டி

  • photodune-2043745-college-student-s

    உற்சாகமாக இருக்கிறார் விஜய் சேதுபதி. விரைவில் ரிலீஸாகவுள்ள ‘தர்மதுரை’ படமும், தனுஷுடன் நடிக்கும் ‘வடசென்னை’ படமும்தான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். “நான் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரு சிறிய காட்சியில் தனுஷ் சாருடன் நடித்திருப்பேன். இந்நிலையில் ‘வடசென்னை’ படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தனுஷ் சார் சொன்னதும் ரசிகர்கள் சிலர் ‘புதுப்பேட்டை’யில் நான் நடித்த காட்சியின் புகைப்படத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சேது’ என்று உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம்” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் விஜய் சேதுபதி. 'தர்மதுரை' படத்தை ஒப்புக் கொள்ள உங்களை கவர்ந்த அம்சம் எது? இப்படத்தின் கதைக்களம் சொல்லப்பட்ட விதம் தான். 'தர்மதுரை' என்ற கதாபாத்திரம் அவனிடம் இருக்கும் அனைத்தையுமே கொடுத்துவிடுவான். அவனுடைய வாழ்க்கையில் பணத்தைப் பெரிதாக நினைக்காத ஒருவன். பேரன்பு கொண்டவன். இந்தப் படத்தில் அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் அனைவருமே அவன் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். படம் தொடங்கியவுடன் க்ளைமாக்ஸ் காட்சி தான். அதற்குப் பிறகு தான் கதையே விரியும். மக்களுக்கு புத

    3 years ago